பார்கோடு பெற்றுக்கொள்ள

பார்கோடு பெற்றுக்கொள்ள
சுப்பர் மார்கட் மற்றும் டிபார்மென்டல் ஸ்டோர்களின் பொயின்ட் ஒப் சேல்ஸ் (POS) ஸ்கேனர்களின் ஊடாக உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு, அனைத்து பொருட்களும் கட்டாயமாக GS1 பார்கோடு இலக்கங்களை (முன்பதாக இது EAN/UPC என்று காணப்பட்டது) கொண்டிருக்க வேண்டும். ஒரு GS1 பார்கோடு குறியீடுகள் சில்லறை நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக உற்பத்தி பொருட்களின் லேபல்களில் அச்சிடப்படவேண்டும். இது இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அல்லது பொதி செய்யப்படும் எல்லா விதமான பொருட்களுக்கும் பொருந்தும். ஒரு கம்பனி பார்கோடுகளை தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ GS1 ஸ்ரீலங்காவினை அணுகுவதனூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

பதிவு செய்யும் செயற்பாட்டினை முழுமைப்படுத்துவதற்காக குறித்த நிறுவனம் பின்வரும் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

உறுதிபடுத்தப்பட்ட கம்பனியின் வியாபார பதிவு
பதிவு செய்யப்பட்ட கம்பனியாக இருந்தால் – இயக்குனர் விபர படிவம் 1 அல்லது படிவம் 20 இன் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
முகவரியினை உறுதி செய்வதற்கான ஒரு பயன்பாட்டு பட்டியலின் (பில்) பிரதி
மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் இருந்து குறித்த கட்டணம் செலுத்தப்பட்டிருப்பின் ( பகுப்பு சுட்டியினை பார்க்கவும்), குறித்த நிறுவனத்துக்கு பார்கோடு இலக்கங்கள் வழங்கப்படுவதோடு பார்கோடின் மென்பிரதியும் வழங்கப்படும். உங்களுக்கு விண்ணப்படிவம் தேவையெனின் எமக்கு தயவு செய்து இமெயில் செய்யவும்.

பார்க்க / பகுப்பு சுட்டியினை தரவிறக்கம் செய்ய